எழுத்தாளர் ஹான் காங். 
தற்போதைய செய்திகள்

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு...

DIN

இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்குக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

2024 ஆம் ஆண்டுக்கான நோபல் விருதுகள் கடந்த திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளுகளுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசை அறிவித்துள்ளனர்.

இந்த முறை, தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் விருதை வென்றுள்ளார். கவித்துவமான மொழியில் தீவிர உரைநடையில் வரலாற்றுத் துயரையும் மனித வாழ்க்கையின் பலவீனங்களையும் ஹான் காங் எழுதியதற்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

1970 ஆம் ஆண்டு பிறந்த ஹான் காங் இளவயது முதலே இலக்கியம் மற்றும் இசையில் ஆர்வம் கொண்டவராகவே இருந்திருக்கிறார். காரணம், ஹானின் தந்தையும் ஒரு நாவலாசிரியரே.

1993 ஆம் ஆண்டு முதல் கவிதைகள் எழுத ஆரம்பித்த ஹான் காங் சிறுகதைகள், நாவல்கள் என இதுவரை பல நூல்களை எழுதியுள்ளார். இவரின் நாவலான, த வெஜிடேரியன் ( the vegetarian) புக்கர் பரிசை வென்றது. இதனை, தமிழில் எழுத்தாளர் சமயவேல், ‘மரக்கறி’ என்கிற பெயரில் மொழியாக்கம் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்தியப் பிரதேசத்தில் மினி பேருந்தும் லாரியும் மோதல்: குஜராத் இசைக் குழுவின் 4 பேர் பலி

சின்ன கண்ணன் அழைக்கிறான்..!

ராகுலும் முகமது அலி ஜின்னாவும் ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள்: பாஜக விமர்சனம்!

கேதார்நாத் யாத்திரைப் பாதையில் நிலச்சரிவு: மகாராஷ்டிர பக்தர் பலி

ரூ. 20 கோடியா? ஒரு ரூபாய்கூட வாங்கவில்லை: ஆமீர் கான்

SCROLL FOR NEXT