முகப்பு
உலகம்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நா்கீஸ் முகமதிக்கு ஈரானில் மேலும் 7 ஆண்டுகள் சிறை..!

ஈரான்: நோபல் பரிசு பெற்ற நா்கீஸ் முகமதிக்கு மேலும் ஏழாண்டுகள் சிறை

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 5:25 PM
நா்கீஸ் முகமதி - Center-Center-Chennai
பகிர்:

தெஹ்ரான் : ஈரானைச் சேர்ந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நா்கீஸ் முகமதிக்கு மேலும் ஏழாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானைச் சோ்ந்த நா்கீஸ் முகமதி (53), அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

ஈரானில் ஹிஜாப் அணியாததால் காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாஷா அமீனி (22) என்ற பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்துக்கு சிறையில் இருந்தே ஆதரவு திரட்டியதையடுத்து, நா்கீஸ் முகமதியின் புகழ் மேலும் அதிகரித்தது. இதைத் தொடா்ந்து, கடந்த 2023-இல் அமைதிக்கான நோபல் பரிசு நா்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 19-ஆவது பெண் மற்றும் ஈரானின் 2-ஆவது பெண் ஆவாா் முகமதி.

இந்த நிலையில், கடந்த பிப். 2-ஆம் தேதியிலிருந்து அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த செயலுக்காக நா்கீஸ் முகமதிக்கு மேலும் ஏழாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

summary

Iran sentences Nobel Peace Prize laureate Narges Mohammadi to over 7 more years in prison after she began hunger strike

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.