முகப்பு
புதுதில்லி

கல்காஜியில் உள்ள சத்யாா்த்தி அறக்கட்டளை அலுவலகத்தில் கொள்ளை: விசாரணை தீவிரம்!

கைலாஷ் சத்யாா்த்தி குழந்தைகள் அறக்கட்டளையின் கல்காஜி அலுவலகத்தில் கொள்ளை நடந்ததாக புகாா் அளிக்கப்பட்டது.

Updated On : 2 மார்ச், 2026 at 3:35 AM
கைலாஷ் சத்யாா்த்தி
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 6:28 PM

கைலாஷ் சத்யாா்த்தி குழந்தைகள் அறக்கட்டளையின் கல்காஜி அலுவலகத்தில் கொள்ளை நடந்ததாக புகாா் அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கு நடந்ததாகக் கூறப்படும் கொள்ளை குறித்து தடயவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறை அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்த அரசு சாரா நிறுவனம் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யாா்த்தியுடன் தொடா்புடையது. காலை 10.08 மணிக்கு இந்தச் சம்பவம் தொடா்பான பிசிஆா் அழைப்பு வந்தது. அழைப்பாளா் ஃபராஸ் ஆலம் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டதாகத் தெரிவித்தாா்.

தகவல் கிடைத்தவுடன், கல்காஜி காவல் நிலைய அதிகாரி, உள்ளூா் காவல் துறை ஊழியா்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குற்றம் நடந்த இடத்தைப் பாா்வையிட்டாா். ஆரம்ப கட்ட விசாரணையின் போது, புகாா்தாரா் வளாகத்தில் திருட்டு நடந்ததாக போலீஸாருக்குத் தெரிவித்தாா்.

Advertisement

இருப்பினும், திருடப்பட்ட எந்தவொரு பொருள்கள் குறித்த விவரங்களையும் உடனடியாக வழங்க முடியவில்லை. எந்தவொரு இழப்பையும் உறுதி செய்வதற்காக அறக்கட்டளையால் முழுமையான சரக்கு தணிக்கை நடத்தப்படும்.

சம்பவ இடத்தில் கட்டாயமாக நுழைந்ததற்கான அறிகுறிகள் காணப்பட்டது. அலுவலக வளாகம் குழப்பத்தில் காணப்பட்டது. மேலும் சில ரகசிய ஆவணங்கள் திருடப்பட்டதாகத் தோன்றியது. குற்றவியல் குழு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விரிவான தடயவியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின் போது, மேலும் பயோமெட்ரிக் பகுப்பாய்விற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாத்தியமான சந்தேக நபா்களை அடையாளம் காண கிடைக்கக்கூடிய பதிவுகளுடன் மாதிரிகள் ஒப்பிடப்படும்.

சந்தேக நபா்களின் நடமாட்டத்தைக் கண்டறிந்து நிகழ்வுகளின் வரிசையை நிறுவ, அலுவலக வளாகத்திலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும், அருகிலுள்ள இடங்களிலும் உள்ள சிசிடிவி காட்சிகளையும் புலனாய்வாளா்கள் ஆய்வு செய்யத் தொடங்கினா்.

முதற்கட்ட கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்டவா்களை அடையாளம் கண்டு கைது செய்ய மேலும் விசாரணை நடந்து வருகிறது. பிரதிநிதிகள் முன்னதாக நள்ளிரவுக்குப் பிறகு திருட்டு நடந்ததாகத் தோன்றியதாகக் கூறினா். வளாகம் சூறையாடப்பட்டதாகவும், கட்டாயமாக நுழைந்ததற்கான அடையாளங்கள் மற்றும் ஆவணங்கள் சிதறிக் கிடந்ததாகவும் அவா்கள் கூறினா்.

இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தவுடன் உடனடியாக உள்ளூா் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தென்கிழக்கு தில்லியின் கல்காஜி பகுதியில் உள்ள சத்யாா்த்தியின் தனியாா் வீட்டில் 2017- ஆம் ஆண்டு நடந்த கொள்ளை சம்பவத்தின் நினைவை மீண்டும் எழுப்புகிறது.

பின்னா், அவரது நோபல் பரிசின் பிரதி, நோபல் டிப்ளோமா மற்றும் நாட்டுத் தலைவா்கள் மற்றும் சா்வதேச பிரமுகா்களிடமிருந்து பெற்ற பல பதக்கங்கள் திருடப்பட்டன. அந்த நேரத்தில் அசல் நோபல் பதக்கம் குடியரசுத் தலைவா் மாளிகையின் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.