ஆயுத பூஜை, விஜயதசமி: தவெக தலைவர் விஜய் வாழ்த்து
ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து புதிய முயற்சிகளிலும் வெற்றி உண்டாகி, அனைவரின் வாழ்வும் தழைத்தோங்க இனிய நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.