எதிர்நீச்சல் தொடரில் நடிகை கனிகா, மதுமிதா, பிரியதர்ஷினி, ஹரிபிரியா |இன்ஸ்டாகிராம்
தற்போதைய செய்திகள்

எதிர்நீச்சல் - 2 நாயகி இவரா?

எதிர்நீச்சல் தொடரின் 2 ஆம் பாகத்தின் நாயகி குறித்து...

DIN

எதிர்நீச்சல் தொடரின் 2 ஆம் பாகத்தில் நடிக்கவுள்ள நாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடர் ஜூன் 8ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. 2022 பிப்ரவரி முதல் ஒளிபரப்பான எதிர்நீச்சல் 744 எபிஸோடுகளுடன் நிறைவு பெற்றது.

எதிர்நீச்சல் முதல் பாகத்தில் நாயகியாக நடிகை மதுமிதா நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்திலும் அவர் நாயகியாக நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், எதிர்நீச்சல் -2 ல் நடிக்கவில்லை என மதுமிதா முன்னதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். அவரின் பதிவு ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையே அளித்தது.

இந்த நிலையில், எதிர்நீச்சல் தொடரின் 2 ஆம் பாகத்தில் நடிகை பார்வதி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

யார் இந்த பார்வதி?

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமான பார்வதி, சன் தொலைக்க்காட்சியில் ஏராளமான சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பின்னர் தொடர்களில் நடிக்கத் தொடங்கினார்.

விஜே பார்வதி

இவர் நடிகை தேவையானியுடன் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது, எதிர் நீச்சல் தொடரின் 2 ஆம் பாகத்தில் ஜனனி பாத்திரத்தில் நடிகை பார்வதி இணைந்து இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT