தற்போதைய செய்திகள்

குறுகிய காலத்தில் நிறைவடைந்த மீனா தொடர்!

மீனா தொடர் நிறைவு தொடர்பாக....

DIN

மீனா தொடர் 368 எபிசோடுகளுடன் இன்று(அக். 11) நிறைவடைந்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை முற்பகல் 11 மணி ஒளிபரப்பாகி வந்த மீனா தொடர் குறுகிய காலத்தில் நிறைவடைந்துள்ளது.

பிரிந்துபோன இரு குடும்பங்களை இணைப்பதற்காக மீனா மேற்கொள்ளும் முயற்சிகளே இத்தொடரின் கதை.

மீனா தொடரின் பிரதானப் பாத்திரத்தில் ஆனந்த ராகம் தொடர் பிரபலம் இந்து செளத்ரி நடித்து வந்தார். மேலும், இத்தொடரில் ஜெய் ஸ்ரீனிவாச குமார், அபிஷேக் சங்கர், விக்னேஷ், சோனியா போஸ் உள்ளிட்டோர் நடிந்து இருந்தனர்.

இத்தொடர் கடந்தாண்டு ஜூலை 24 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்த நிலையில், பரபரப்பான இறுதிக்கட்டக் காட்சிகளுடன் இன்று(அக். 11) நிறைவடைந்துள்ளது.

மீனா தொடர் ஒளிபரப்பான முற்பகல் 11 மணிக்கு எந்தத் தொடர் ஒளிபரப்பாகும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சீரியலான புனிதா தொடர் வரும் திங்கள்கிழமை முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இந்தத் தொடர் நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாதப் பலன்கள் - மிதுனம்

பயணிகள் அனைவருக்கும் இலவச உணவு வழங்கப்படும் ஒரே ரயில்!

பிப்ரவரி மாதப் பலன்கள் - ரிஷபம்

டிரம்ப்பிடம் முழுமையாக சரணடைந்துவிட்டார் மோடி! காங்கிரஸ்

வரி குறைப்பு! அமெரிக்க வெளியுறவு அமைச்சரை சந்திக்கிறார் ஜெய்சங்கர்!

SCROLL FOR NEXT