முகப்பு
தற்போதைய செய்திகள்

முரசொலி செல்வம் உடல் தகனம்

மறைந்த பத்திரிகையாளர் ‘முரசொலி’ செல்வத்தின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Updated On : 11 அக்டோபர் 2024, 7:22 pm IST
பகிர்:

மறைந்த பத்திரிகையாளர் ‘முரசொலி’ செல்வத்தின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

முரசொலி நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், எழுத்தாளருமான ‘முரசொலி’ செல்வம் (83), பெங்களூரில் வியாழக்கிழமை காலமானார்.

சென்னை கோபாலபுரத்திலுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதியின் இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த முரசொலி செல்வத்தின் உடலுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் துரைமுருகன், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

Advertisement

மேலும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா, நடிகர் பிரசாந்த், சத்யராஜ் உள்பட திரையுலகைச் சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

முரசொலி செல்வத்தின் உடல் கோபாலபுரத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.