கவரப்பேட்டையில், நின்று கொண்டிருந்த ரயில் மீது விரைவு ரயில் மோதியதால், தடம் புரண்ட பெட்டிகள்  
தற்போதைய செய்திகள்

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?: காவல்துறை விசாரணை

ரயில் பெட்டிகள் தடம் புரண்டதற்கு நாசவேலை காரணமா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

DIN

திருவள்ளூர் மாவட்டம், பெகவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை(அக். 11) இரவு விபத்துக்குள்ளான மைசூரு - தர்பங்கா பயணிகள் விரைவு ரயிலில்(12578) தடம் புரண்ட ரயில் பெட்டிகள் தடம் புரண்டதற்கு நாசவேலை காரணமா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் உள்ள பெட்டியை கீழே தள்ளுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், ரயில் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட உள்ளது.

இந்த குழுவினர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்து, ரயிலை இயக்குதல், சிக்னல், தொழில்நுட்ப கோளாறுக்கான காரணங்களை ஆராய்ந்து அதன் அறிக்கையை சமர்பிப்பர்.

விபத்துக்கு மனிதத் தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறுகள் காரணமா என ஆய்வு செய்யப்பட்டு, அதன்படி உயர்மட்டக் குழுவினர் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்வர்.

நாசவேலை காரணமா?

ரயில் விபத்தில் தண்டவாளங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த விபத்துக்கு நாசவேலை காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீட்புப் பணிகள் தீவிரம்

சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் உள்ள பெட்டியை கீழே தள்ளுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சீரமைப்பு பணிகளில் சுமார் 350 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து ஏற்பட்ட வழித்தடத்தில், சனிக்கிழமை(அக்.12) மாலை முதல் பொன்னேரி - கவரப்பேட்டை வழித்தடத்தில் ரயில்கள் சேவை வழக்கம்போல மீண்டும் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு: பயணிகள் அவதி!

தமிழக காவலர்கள் மீது கல்வீச்சு: வடமாநில தொழிலாளர்களுக்கு சிறை!

மேட்டூர் அணை நீர்மட்டம் 2-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது!

புதிய பதவி காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

செப்.12, 19-இல் தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்பு கூட்டம்

SCROLL FOR NEXT