தற்போதைய செய்திகள்

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் பேரவைகளுக்கான தேர்தல் மற்றும் கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளார்.

அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிர மாநிலத்துக்கு நவம்பர் 20ஆம் தேதி ஒரு கட்டமாகவும், நவம்பர் 13-ஆம் தேதி வயநாடு மக்களவைத் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் மொத்தம் 288 தொகுதிகளும், ஜார்கண்ட் சட்டப்பேரவையில் மொத்தம் 81 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை நவ. 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தற்போது, ஜார்க்கண்ட் மாநிலத்தை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

SCROLL FOR NEXT