புதுச்சேரியில் ரெளடிகளால் தாக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று தெரிவித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு சுயேச்சை எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று(அக். 16), புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகே உள்ள பெட்டிக் கடையில் இருந்த ஊழியர் சந்திரனை குடிபோதையில் வந்த ரெளடிகள் பணம் கேட்டு பயங்கரமாக தாக்கினர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காததைக் கண்டித்தும் தாக்குதலில் ஈடுபட்ட ரெளடிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், ரெளடிகளின் அட்டூழியத்தை ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்திரனை, ஸ்ட்ரெச்சரோடு, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் 20-க்கும் மேற்பட்ட சமூக அமைப்பினர் அரசு மருத்துவமனையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி அழைத்து வந்தனர். தொடர்ந்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: நிவாரண முகாம்களில் இரண்டு நாள்களில் 14.60 லட்சம் பேருக்கு உணவு
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு நடத்தினர். ஆனால், அவர்கள் அதை ஏற்க மறுத்து ஆளுநரை சந்திக்க போவதாக தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் படுகாயம் அடைந்த கடை உரிமையாளர் சந்திரனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது..
இதனை தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அதில் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர் இல்லாமல் வெறும் நோயாளி மட்டும் அனுப்பக்கூடாது என ஆம்புலன்ஸை புறப்பட விடாமல் கீழே படுத்து போலீஸார் உடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆளுநர் மாளிகை முன்பு பெரும் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.