கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

ரயில் டிக்கெட் முன்பதிவுக் காலம் குறைப்பு!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அளவு குறைப்பு...

DIN

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அளவை 120 நாள்களில் இருந்து 60 நாள்களாகக் குறைத்து ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நீண்ட தொலைவு செல்லும் அதிவிரைவு ரயில்களில் பயணம் செய்வதற்கு 120 நாள்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி இருக்கிறது.

இந்நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு கால அளவை 60 நாள்களாகக் குறைத்து ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது, பயணம் செய்யும் நாளுக்கு 60 நாள்கள் முன்னதாக டிக்கெட் முன்பதிவு தொடங்கும். வருகிற நவம்பர் 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

மேலும், இந்த 60 நாள்களுக்குள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை வழக்கம்போல ரத்து செய்துகொள்ளலாம்.

தாஜ் எக்ஸ்பிரஸ், கோமதி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பகல் நேரங்களில் இயங்கும் அதி விரைவு ரயில்களுக்கான முன்பதிவில் எவ்வித மாற்றமுமில்லை.

மேலும், அக். 31 வரை செய்யப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவுகளிலும் எந்த மாற்றமும் இல்லை.

வெளிநாட்டுப் பயணிகளுக்கு முன்பதிவு காலம் 365 நாள்கள் என்றிருக்கும் நிலையில் அதுவே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

மேட்டூர் அணை: தண்ணீர் திறப்பு குறைப்பு!

விராலிமலை: விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

பாகிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில்

SCROLL FOR NEXT