கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை கட்டுமானப் பணியில் இருந்த 7 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் 20 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
"இவ்விபத்தில் 20 பேர் சிக்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார், 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 5 பேரை காணவில்லை" என்று காவல் துறை அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், காணாமல் போனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
"நகரத்தில் பலத்த மழை பெய்ததன் காரணமாக 7 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. ஒருவர் பலியாகியுள்ளார், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று இச்சம்பத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
பெங்களூருவில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெங்களூரில் உள்ள பள்ளிகளுக்கு நாளை(அக். 23)விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.