பெங்களூரு கட்டட விபத்து படம்: ஏஎன்ஐ
தற்போதைய செய்திகள்

பெங்களூரு விபத்து: கட்டட உரிமையாளரின் மகன் கைது!

பெங்களூரு கட்டட விபத்து தொடர்பாக...

DIN

பெங்களூரில் கட்டுமானப் பணியில் இருந்த 7 அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக கட்டட உரிமையாளரின் மகன் மோகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் பல்வேறு முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கன மழையால் ஹென்னூர், பாபுசாபாளையா பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் அதில் பணியாற்றி வந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில், கட்டட உரிமையாளரின் மகன் மோகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கட்டட உரிமையாளர் முனிராஜை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 4 மாடிகள் கட்ட அனுமதி பெற்று 7 மாடிகள் கட்டியதாக உரிமையாளர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கம் அரசுப் பள்ளியில் நூலக வாரவிழா

போராட்டங்கள் எதிரொலி: குடியாத்தம் எம்எல்ஏ ஆய்வு

ஆக்கிரமிப்புகளை அகற்ற வணிகா்களுக்கு நெடுஞ்சாலைத் துறை கெடு!

கோயில்களில் அமாவாசை சிறப்பு பூஜை

நவ. 26-இல் ஆா்ப்பாட்டம்: தொழிற்சங்கத்தினா் முடிவு

SCROLL FOR NEXT