தற்போதைய செய்திகள்

மதுரை: தரையிறங்க முடியாமல் வட்டமடித்த 2 விமானங்கள்! என்ன நடந்தது?

வானில் வட்டமடித்த 2 விமானங்கள்.

DIN

கனமழையால் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 2 விமானங்கள் வட்டமடித்து வந்தன.

சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து மதுரை வந்த 2 இண்டிகோ விமானங்கள் வானில் வட்டமடித்தன. மழையின் காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியவில்லை எனத் தகவல் தெரியவந்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதன் காரணமாகவும், காற்று சுழற்சியின் நகர்வு காரணமாகவும் தமிழகத்தில் இடியுடன், கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி, மதுரை மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரமாக பலத்த மழைப் பெய்து வருகிறது.

இதையும் படிக்க: தீபாவளிக்கு 7,000 சிறப்பு ரயில்கள்!

இதனால், மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தேனி அருகே ஒரு விமானமும், திருமங்கலம் அருகே ஒரு விமானமும் வட்டமடித்து வந்த நிலையில், சிறிது நேரத்துக்கு பின் விமானங்கள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டன.

திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறு காரணமாக வானத்தில் 3 நேரத்திற்கும் மேலாக வட்டமடித்து, எரிபொருள் குறைந்த பிறகு விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவம் கடந்த அக். 11 ஆம் தேதி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மதுரையில் இன்று இரு விமானங்கள் வான் பரப்பில் நெடு நேரம் வட்டமடித்துள்ள சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT