விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம் நுழைவு வாயில் பகுதியில் தர்னாவில் ஈடுபட்டு வரும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தர்னா 
தற்போதைய செய்திகள்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தர்னா

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் பகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் வெள்ளிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் பகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் வெள்ளிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்லிடப்பேசி, சமூக ஊடகங்கள் வாயிலாக எனக்கு கொலை மிரட்டல், அச்சுறுத்தல் வருவதாகவும், மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்,அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு காவல் நிலையத்தில் 21 புகார்கள் அளித்தும் திமுக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு முன்னாள் அமைச்சர் சண்முகம் வெள்ளிக்கிழமை வந்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியில் சென்று இருப்பதாக காவல்துறையினர் கூறினர்.

தான் வருவதாக தெரிந்தும் வேண்டுமென்றே வெளியே சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தன்னை சந்திக்கும் வரை தான் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாகக்கூறி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் பகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: வில்வித்தை போட்டியில் கோவை மாணவா் சாம்பியன்

இன்று கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை வானிலை மையம்

SCROLL FOR NEXT