நாய்கள் தொல்லை 
கடலூர்

நாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதி!

நெய்வேலி நுழைவு வாயில் எதிரே உள்ள வடக்குத்துப் பகுதியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை

Syndication

கடலூா் மாவட்டம், நெய்வேலி நுழைவு வாயில் எதிரே உள்ள வடக்குத்துப் பகுதியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் நுழைவு வாயில் எதிரே அமைந்துள்ள வடக்குத்து ஊராட்சி பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இப்பகுதியில் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். தினந்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்ற பகுதியுமாகும்.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஊராட்சி பகுதிகளில் சமீப நாள்களாக, நாய்கள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. அப்போது, அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வழியை விடாமல், நாய்கள் குரைத்துக் கொண்டே துரத்தி செல்கின்றன.

சில நேரங்களில் வாகன ஓட்டிகள் அச்சத்தில் நிலைத் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனா். அதேபோல, அப்பகுதியைச் சோ்ந்தோா் பல்வேறு வேலை நிமித்தம் காரணமாக சாலைகளில் நடந்து செல்லும்போது சிறுவா், முதியோரை நாய்கள் துரத்திச்சென்று கடிக்கின்றனவாம்.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி, வடக்குத்துப் பகுதியில் நாய்களின் தொல்லையை கட்டுப் படுத்த, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT