திருவாரூரில் பாதாள சாக்கடையில் மூழ்கி பலியான அருணாச்சலம் - ஓட்டுநர் மணிமாறன் 
தற்போதைய செய்திகள்

பாதாள சாக்கடையில் மூழ்கி இளைஞர் பலி, காப்பாற்ற சென்ற இளைஞரும் பலி

திருவாரூரில் பாதாள சாக்கடையில் மூழ்கிய இளைஞரை காப்பாற்ற சென்ற இளைஞரும் சாக்கடையில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை பலியாகினார்.

DIN

திருவாரூர்: திருவாரூரில் பாதாள சாக்கடையில் மூழ்கிய இளைஞரை காப்பாற்ற சென்ற இளைஞரும் சாக்கடையில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை பலியாகினார்.

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட மேல வட போக்கி தெரு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கழிவு நீர் உந்து நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சட்டவிரோதமாக கழிவு நீர் தனியார்வண்டி மூலம் கழிவு நீர் பாதாள சாக்கடை குழிக்குள் வெளியேற்றப்பட்டது. அப்போது தனியார் கழிவுநீர் வாகனத்தின் ஓட்டுநர் மணிமாறன்(30) மேன்ஹோல் பகுதியில் வழுக்கி பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்து மூழ்கினார்.

இதையடுத்து, அவரை மீட்பதற்காக வாருகுச்சி தெருவை சேர்ந்த வேல்முருகன் மகன் அருணாச்சலம் (27) முயன்றபோது அவரும் தவறி பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்தார்.

மேலும் மீட்கப்பட்ட இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கே இருவரும் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து இருவரது உடலும் உடல்கூறாய்வுக்காக எடுத்துச் செல்லும் போது உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. இதனைத்தொடர்ந்து மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இருவது உடலும் உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவ குறித்து திருவாரூர் நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

SCROLL FOR NEXT