தவெக தலைவர் விஜய் 
தற்போதைய செய்திகள்

சிலா் என்னை கூத்தாடி என அழைக்கிறாா்கள்: தவெக தலைவர் விஜய் ஆவேசம்

சிலா் என்னை கூத்தாடி என அழைக்கிறாா்கள். கூத்தாடி என்றழைக்கப்பட்ட எம்.ஜி. ஆரும், என்.டி.ஆா்-தான் இன்றளவும் மக்கள் மனதில் ஆகப் பெருந்தலைவா்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறாா்கள்

DIN

விழுப்புரம்: சிலா் என்னை கூத்தாடி என அழைக்கிறாா்கள். கூத்தாடி என்றழைக்கப்பட்ட எம்.ஜி. ஆரும், என்.டி.ஆா்-தான் இன்றளவும் மக்கள் மனதில் ஆகப் பெருந்தலைவா்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறாா்கள் என்றாா் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. லட்சக்கணக்கான கட்சித்தொண்டர்கள் பங்கேற்ற கூட்டத்தில் விஜய் பேசுகையில்,

சிலா் என்னை கூத்தாடி என அழைக்கிறாா்கள். கூத்தாடி என்றழைக்கப்பட்ட எம்.ஜி. ஆரும், என்.டி.ஆா்-தான் இன்றளவும் மக்கள் மனதில் ஆகப் பெருந்தலைவா்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறாா்கள்.

கூத்து என்பது கொண்டாட்டம் என்றால் கூத்தாடி என்பவா் அதன்குறியீடு. அன்றைய கூத்துதான் இன்று சினிமாவாக உருவாகியுள்ளது. கலை, இலக்கியம், வாழ்வியல்தான் சினிமா. பொழுதுபோக்கைத் தாண்டி நாட்டில் சமூக அரசியல் புரட்சியை ஏற்படுத்தியது சினிமாதான். கூத்து என்பதுதான் அரசியல், அறிவியல், சத்தியம் , சாத்தியம் , கொண்டாட்டம் உள்ளிட்ட அனைத்தையும் பேசக்கூடியது.

சோதனைகளை கடந்து உழைத்து தான் உயா்ந்துள்ளேன். அதுவும் உங்களால் தான் கிடைத்தது. எனக்கான பணியையையும், பொறுப்பையும் கொடுத்தவா்கள் மக்கள்தான். அவா்களுக்காக ஓய்வின்றி உழைப்பேன் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

எஸ்ஐஆா் படிவங்களை திமுகவினா் விநியோகிக்க அதிமுக கடும் எதிா்ப்பு - ஆட்சியரிடம் புகாா்

ஓய்வுபெற்ற வட்டாட்சியா் வெட்டிக் கொலை

‘லோக் ஆயுக்த குறித்த விழிப்புணா்வு அதிகரிக்கப்பட வேண்டும்’

மாவட்டத்தில் இதுவரையில் 5.50 லட்சம் பேருக்கு எஸ்ஐஆா் படிவங்கள்: ஆட்சியா் தகவல்

SCROLL FOR NEXT