முகப்பு
தற்போதைய செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்துக்கு 17 மாவட்டங்களில் மழை!

இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில் மழை.

Updated On : 29 அக்டோபர், 2024 at 11:22 AM
மழை (கோப்புப்படம்)
பகிர்:

அடுத்த 2 மணி நேரத்துக்கு 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய கிழக்கு கடலோரப் பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தால் அக். 31-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவள்ளூர், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், திருப்பத்தூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →