கோவை பிராட்வே திரையரங்கில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் கவின் மற்றும் படக்குழுவினர். 
தற்போதைய செய்திகள்

பிளடி பெக்கர் படத்தின் சிறப்புக் காட்சி: ரசிகர்களுடன் பார்த்து ரசித்த படக்குழுவினர்

தமிழகத்தில் கோவையில் திரையிடப்பட்ட பிளடி பெக்கர் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை படக்குழுவினர் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தனர்.

DIN

கோவை: தமிழகத்தில் கோவையில் திரையிடப்பட்ட பிளடி பெக்கர் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை படக்குழுவினர் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தனர்.

இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் உருவாகி உள்ள பிளடி பெக்கர் திரைப்படம் தீபாவளி நாளான இன்று(அக்.31) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

கோவை பிராட்வே திரையரங்கில் வியாழக்கிழமை காலை 7 மணி சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதனை படக்குழுவினர்களான நடிகர்கள் கவின், ரெடின் கிங்ஸ்லி, இயக்குநர் சிவபாலன் ஆகியோர் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தனர்.

கோவை பிராட்வே திரையரங்கில் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து கொண்ட படக்குழுவினர்.

படம் முடிந்து வெளியில் வந்த அவர்களுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த படக்குழுவினர் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இந்த படம் கமர்சியல் படம். தனிப்பட்ட ஸ்டைலில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தவர்கள், அனைவரும் இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

நடிகர் கவினிடம் அடுத்த படம் குறித்தான செய்தியாளர்களின் கேள்விக்கு இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் நடித்து கொண்டிருப்பதாக பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜப்பான் பயணம் நிறைவு! சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி!!

குடை எடுத்துச் செல்லுங்கள்.. இன்றும், நாளையும் வெப்பநிலை உயரும்!

ஒட்டுமொத்த கிராமத்தை ஒரே வீடாக மாற்றிய தேர்தல் ஆணைய மேஜிக்: ராகுல்

பாதுகாப்புத் துறையில் வெளிநாட்டுப் பொருள்களை இந்தியா நம்பியிருக்க முடியாது: ராஜ்நாத் சிங்

ஏதேன் தோட்டம்... பிரணிதா!

SCROLL FOR NEXT