மத்திய உள்துறை அமைச்சகம் 
தற்போதைய செய்திகள்

தமிழக காவல்துறையைச் சேர்ந்த 8 பேருக்கு மத்திய அரசின் சிறப்பு விருது அறிவிப்பு

தமிழக காவல்துறையைச் சேர்ந்த 8 பேர் உள்பட 463 பேருக்கு 2024 ஆம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் 'திறன் பதக்க' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

புதுதில்லி: தமிழக காவல்துறையைச் சேர்ந்த 8 பேர் உள்பட 463 பேருக்கு 2024 ஆம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் 'திறன் பதக்க' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 முதல் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் காவல் துறை, மத்திய பாதுகாப்பு அமைப்புகள், மத்திய,மாநில தடய அறிவியல், புலனாய்வு பிரிவு ஆகியவற்றில் சிறப்பு நடவடிக்கை, புலனாய்வு, நுண்ணறிவு, தடய அறிவியல் ஆகிய நான்கு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு 'மத்திய உள்துறை அமைச்சகம் பதங்களை வழங்கி கௌரவித்து வருகிறது.

இந்து விருது சிறந்த பணியை அங்கீகரிப்பதற்கும், உயர் தொழில்முறை தரங்களை மேம்படுத்துவதற்கும், சம்பந்தப்பட்ட அலுவலர், அதிகாரிகளின் மன உறுதியை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதி, அதாவது சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளன்று இந்த பதக்கம் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான இந்த விருது தமிழக காவல்துறையைச் சேர்ந்த 8 பேர் உள்பட பல்வேறு மாநிலங்களின் காவல்துறை, மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்), மத்திய காவல் அமைப்பு (சிபிஓ) ஆகியவற்றின் 463 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழக காவல்துறையைச் சேர்ந்த 8 பேர் உள்பட 463 பேருக்கு 2024 ஆம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் 'திறன் பதக்க' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக புலனாய்வுப் பிரிவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வந்திதா பாண்டே, கே. மீனா,காவல் ஆய்வாளர்கள் எம். அம்பிகா, என். உதயகுமார், எஸ். பாலகிருஷ்ணன், ஏசிபி சி.கார்த்திகேயன், சி.நல்லசிவம் மற்றும் தடயஅறிவியல் பிரிவு துணை இயக்குநர் சுரேஷ் நந்தகோபால் என 8 பேர் 'மத்திய உள்துறை அமைச்சகத்தின் 'திறன் பதக்க' விருதை பெறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தினம் தினம் திருநாளே!

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

SCROLL FOR NEXT