சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை கனமழையால் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக, அச்சிலையை செதுக்கிய சிற்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரத்தின் சிந்துதுா்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மராட்டிய மன்னா் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை கனமழையால் திங்கள்கிழமை இடிந்து விழுந்தது.
சிலையின் கட்டுமான தரத்தில் மாநில அரசு கவனம் செலுத்தவில்லை எனவும் முறையற்ற பராமரிப்பே சிலை சேதமடைய காரணம் எனவும் எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
மகாராஷ்டிரத்தில் மராட்டிய மன்னா் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை அண்மையில் இடிந்து விழுந்த நிலையில், அவரின் பாதம் பணிந்து, மன்னிப்பு கோருவதாக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். சிந்துதுா்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் அமைக்கப்பட்ட அந்தச் சிலை, கடந்த ஆண்டு டிசம்பரில் கடற்படை படை தினத்தையொட்டி பிரதமா் மோடியால் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவாகரம் தொடர்பாக சத்ரபதி சிவாஜியின் சிலையை செதுக்கிய சிற்பி ஜெயதீப் ஆப்தேவை சிந்துதுா்க் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜெயதீப் ஆப்தே தானேவில் இருந்து சிந்துதுா்க்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று சிந்துதுா்க் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.