மகேந்திர சிங் தோனி கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

ஐபிஎல் 2025-ல் தோனி விளையாட மாட்டாரா? சிஎஸ்கே பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல்லில் தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்ற விவாதம் ஏற்படுத்திய சிஎஸ்கே பதிவு பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

அடுத்தாண்டு ஐபிஎஸ் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டம் மகேந்திர சிங் தோனி விளையாடுவாரா என்ற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் ஐபிஎல்லில் விளையாடு வரும் நிலையில், அந்த அணியின் எக்ஸ் தள பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஐபிஎல் 2025-ல் தோனி விளையாடுவாரா?

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2020ஆம் ஆண்டில் ஓய்வு முடிவை அறிவித்த தோனி, தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.

2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரே அவரது கடைசி தொடராக இருக்கும் என்று எண்ணிய நிலையில், அந்தாண்டு கோப்பையை வென்று கொடுத்த தோனி, அடுத்தாண்டும் விளையாடுவேன் என்று அறிவித்திருந்தார்.

இந்தாண்டு சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய தோனி, வீரராக மட்டுமே களமிறங்கி விளையாடினார்.

தனது ஓய்வு முடிவை இதுவரை தோனி அறிவிக்காத நிலையில், அடுத்தாண்டு விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் ரசிகர்கள் உள்ளனர்.

அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில், அந்த ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்வதற்கான விதியை பொறுத்தே அவர் விளையாடுவதை முடிவெடுப்பார் என்று சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சிஎஸ்கேவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், தோனியின் நெ.7 ஜெர்ஸியை பகிர்ந்து ‘மேஜர் மிஸ்ஸிங்’ எனப் பதிவிட்டுள்ளனர்.

இது மீண்டும் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு தரப்பினர் தோனி ஓய்வை அறிவிக்கவுள்ளார் என்றும் மறு தரப்பினர் சிஎஸ்கே ஜெர்ஸி மாறவுள்ளதாகவும் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திடம் இருந்து இதுவரை எவ்வித விளக்கமும் வெளியாகவில்லை.

தோனிக்காக மாற்றப்படும் ஐபிஎல் விதிகள்?

தோனியால் ஐபிஎல் நிர்வாகத்துக்கான வருமானம் அதிகரிக்கிறது என்றால் மறுக்க முடியாது.

ஏனெனில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெற்று விடுவார் என்ற எண்ணத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை அணி விளையாடும் மைதானங்கள் தோறும் குவிந்து ஆதரவளித்து வருகின்றனர்.

போட்டியை காண்பதற்கான டிக்கெட் விலைகள் பல மடங்கு அதிக விலை கொடுக்கப்பட்டு வாங்கப்படுகிறது. சென்னை அணி விளையாடும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் விற்றுத் தீர்கின்றன.

இந்த நிலையில், தோனி விளையாடுவதற்காக ஒரு விதிமுறையை மட்டும் யோசிக்காமல் மாற்றுவதற்கு ஐபிஎல் நிர்வாகம் முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்து 5 ஆண்டுகள் ஆன வீரரை ‘அன்கேப்’ வீரராக கருதும் விதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகத்திடம் சென்னை சூப்பர் கிங்ஸ் கோரிக்கை வைத்துள்ளது.

இந்த கோரிக்கையை ஐபிஎஸ் நிர்வாகம் ஏற்றதாகவும், இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள மெகா ஏலத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரவைத் தோ்தலில் போட்டியிட திமுகவிடம் 5 இடங்கள் கேட்போம்: முஸ்லீம் லீக் தலைவா் காதா்மைதீன்

வானவில் மன்றத்தில் அறிவியல் விழிப்புணா்வு செயல்பாடுகளை மேற்கொள்ள முடிவு!

குடிநீா் பிரச்னையை சீா் செய்யாவிட்டால் மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம்

கந்தா்வகோட்டை வட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தூய்மைப் பணி

திருச்சி காப்புக்காடுகளில் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT