முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 53,640-க்கும் விற்பனையாகிறது.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 4:51 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 53,640-க்கும் விற்பனையானது.

கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், புதன்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.280 உயா்ந்து, ரூ. 53,720-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ. 6,705-க்கும் , பவுனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 53,640-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி நேற்றைய விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.91.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.91,500-க்கும் விற்பனையாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →