தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!
இன்றைய தங்கம் விலை நிலவரம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 54,920-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 15 குறைந்து ரூ. 6,865-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி கிராமுக்கு ரூ. 1 குறைந்து ரூ.97-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,000 குறைந்து ரூ.97,000-க்கும் விற்பனையாகிறது.
Advertisement
Advertisement
தங்கத்தின் மீது முதலீடு செய்வது அதிகரித்துள்ளதால் தங்கம் விலை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. நேற்று(செப். 15) தங்கத்தின் விலை ரூ.55,000ஐ கடந்து விற்பனையான நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.