தங்கம் (கோப்புப்படம்) Din
தற்போதைய செய்திகள்

புதிய உச்சம்... தங்கம் விலை ரூ. 56,000-ஐ தொட்டது!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 160 உயர்வு.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று செவ்வாய்கிழமை கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ.7,000-க்கும், சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 56,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இந்த மாத தொடக்கத்தில் (செப்.1) தங்கம் விலை கிராம் ரூ.6,695-க்கும், சவரன் ரூ.53,560-க்கும் விற்பனையானது. தொடா்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், கடந்த செப்.20-இல் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.6,885-க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55,080-க்கும் விற்பனையானது.

செப்.21-இல் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.6,960-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.55,680-க்கும் விற்பனையாகி தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சமாக ரூ. 56,000-க்கு விற்பனையாகிறது.

வெள்ளிவிலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.98-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.98,000-க்கும் விற்பனையானது.

கடந்த 5 நாள்களில் மட்டும் தங்கம் கிராமுக்கு ரூ.175-ம், சவரனுக்கு ரூ.1,400-ம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகும் அமுதும்! - ஜெனிலியா

அழகிய நதி... மாளவிகா மோகனன்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சுதர்ஷன் ரெட்டிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் முழு ஆதரவு!

கடலுக்கு அடியில் வெளியிடப்பட்ட திரௌபதி - 2 முதல் பார்வை!

ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்!

SCROLL FOR NEXT