பிரதமரைச் சந்திப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (செப். 26) சென்னையில் இருந்து தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இன்று இரவு தில்லி சென்றடையும் அவர், அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார். நாளை காலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து, தமிழகத்தின் நலன் சாா்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளிக்கிறார்.
இந்த சந்திப்பின்போது தமிழகத்திற்கான நிதி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பிரதமரிடம் அவர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு சமக்ரா சிக்ஷா கல்வி திட்டத்தில் தமிழகத்திற்கான நிதி நிறுத்தப்பட்டது குறித்தும் முதல்வர் பேசலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு, நாளை மாலை 5.35 மணிக்கு தில்லியில் இருந்து புறப்படும் முதல்வர், இரவு 8.20 மணிக்கு சென்னை வந்தடைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.