கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

விருதுநகர் அருகே கீழ ஒட்டம்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் சனிக்கிழமை காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

DIN

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கீழ ஒட்டம்பட்டி கிராமத்தில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் சனிக்கிழமை காலை திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்து சாத்தூரை சுற்றி 15 கிலோ மீட்டருக்கு மேல் பயங்கர அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தொடர்ந்து கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக பட்டாசு ஆலையில் உள்ள பட்டாசுகள் வெடித்து சிதறி வருவதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சாத்தூர்,சிவகாசி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைத்துறை வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்களும் பட்டாசு ஆலை நுழைவாயில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஆலையில் உள்ள பட்டாசுகள் முழுவதும் வெடித்து முடித்த பின்னரே பாதிப்புகள் குறித்த விவரங்கள் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: என்கவுன்டரில் மணிகண்டன் பலி

கலைஞர் ஒளியில் வெற்றிப் பாதையில் நடைபோடுவோம்! முதல்வர் ஸ்டாலின்

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

இந்த நாள் இனிய நாள்!

SCROLL FOR NEXT