கோப்புப்படம் Din
தற்போதைய செய்திகள்

மயிலம் அருகே கார் மோதி 3 பேர் பலி

சாலையில் நடந்து சென்ற ஒருவர், பைக்கில் சென்ற இருவர் என 3 பேர் பலி.

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கார் மோதியதில் சாலையில் நடந்து சென்ற ஒருவர், பைக்கில் சென்ற இருவர் என 3 பேர் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை பலியாகினர்.

திண்டிவனம் வட்டம், பேரணி பகுதியைச் சேர்ந்தவர்கள் அய்யனார் (32), பூபாலன் (35). நண்பர்களான இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திண்டிவனத்திலிருந்து பேரணி கிராமத்துக்கு பைக்கில் சென்றுக்கொண்டிருந்தனர்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மயிலம் அடுத்த விளங்கம்பாடி அருகே சென்றபோது, திண்டிவனத்திலிருந்து - விழுப்புரம் நோக்கிச் சென்ற கார்,அங்கு சாலையில் நடந்து ஒருவர் மீது மோதி, பின்னர் பைக்கில் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பைக்கில் சென்ற அய்யனார், பூபாலன் ஆகியோரும், சாலையில் நடந்து சென்ற பெயர், பெயர் தெரியாத நபரும் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

இந்த விபத்தால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துத் தடைப்பட்டது. தகவலறிந்த மயிலம் போலீஸார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் நிகழ்விடம் சென்று விபத்தில் இறந்த 3 பேர்களின் சடலங்களையும் கைப்பற்றி, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவ்விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தி: முதல்வர் ஸ்டாலின்

கூலி = 100 பாட்ஷா... நாகார்ஜுனாவின் அதிரடியான பேச்சு!

ஆடிப்பெருக்கு: காவிரி கரையில் திரண்ட மக்கள்!

எனக்கும் சத்யராஜுக்கும் முரண்பாடு... ஆனால்..: ரஜினிகாந்த்

தீரன் சின்னமலை நினைவு நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

SCROLL FOR NEXT