மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து. Din
தற்போதைய செய்திகள்

மரக்கடையில் தீ விபத்து! பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்!

பல மணி நேரம் போராடிய தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

DIN

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பிரதான சாலையில் அமைந்துள்ள மரக்கடையில் எதிர்பாரத விதமாக தீப்பிடித்ததால் பல லட்சம் மதிப்புள்ள மர பொருள்கள் எரிந்து நாசமாகியது.

பல மணி நேரம் போராடிய தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சாகுல் இவரது மகன் மைதீன் பிச்சை என்பவருக்கு நெல்லை பேட்டை சேரன்மாதேவி பிரதான சாலையில் சொந்தமான மரக்கடை உள்ளது. இக்கடையில் வீட்டிற்கு தேவையான ஜன்னல் நிலை கதவு மற்றும் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர்.

நேற்று இரவு 11 மணி அளவில் கடை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. சுமார் 100 மீட்டர் சதுர பரப்பளவு கொண்ட கடையில், மொத்த பகுதியில் உள்ள பொருள்கள் தீப்பற்றி எரிந்தன.

தகவல் அறிந்து சேரன்மாதேவி, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்துவந்த தீயணைப்பு நிலைய வாகனங்கள் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் பணியானது விடிய விடிய பல மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றாலும், தீ ஓரளவுக்கு தான் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.

இன்று காலை வரையும் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதுகுறித்து பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வகுப்புவாதம், வெறுப்பு அரசியலுக்கு எதிராக ராகுல்: சசி தரூர்

தமிழக அரசின் விருது வென்ற துஷாரா விஜயன் கூறியதென்ன?

நாட்டின் மிகச் சிறிய பட்ஜெட் பற்றி தெரியுமா!

மணப்பேறு, மகப்பேறு அருளும் கோயில்

துயர் நீக்கிய தலம்!

SCROLL FOR NEXT