டிராம் (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

மேற்கு வங்கம்: 150 ஆண்டுகளாக இயங்கிவந்த டிராம் சேவை நிறுத்தம்!

கொல்கத்தாவில் டிராம் சேவை நிறுத்தம் சேவை நிறுத்தம் தொடர்பாக...

DIN

கொல்கத்தாவில் 150 ஆண்டுகளாக இயங்கிவந்த டிராம் சேவையை நிறுத்த மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் தனித்துவமிக்க அடையாளங்களில் ஒன்றான கொல்கத்தா நகரில் இயங்கிவந்த டிராம் போக்குவரத்து சேவை இந்தாண்டு 150 ஆண்டுகளை நிறைவு செய்தது.

கொல்கத்தாவில் 3 வழித்தடங்களில் மட்டுமே டிராம் சேவை பயன்பாட்டில் இயங்கிவந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 150 ஆண்டுகளுக்கு முன்னதாக 1873 பிப்.24-ல் கொல்கத்தா நகரில் டிராம் சேவை தொடங்கப்பட்டது.

கொல்கத்தா மக்களின் உயிர்நாடியாக கருதப்படும் 150 ஆண்டுகால டிராம் சேவை ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. டிராம்கள் பாட்னா, சென்னை, நாசிக் மற்றும் மும்பை போன்ற நகரங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டன, ஆனால் தொடங்கப்பட்ட எல்லா இடங்களிலும் படிப்படியாக குறைக்கப்பட்டன.

டிராம் சேவை நிறுத்தம்

டிராம்கள் குறைந்த வேகத்தில் இயங்குவதாலும், மக்கள் அதிவேக பயணத்தை விருப்புவதாலும் டிராம் சேவை நிறுத்தப்பட உள்ளதாக மேற்குவங்க போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார். கொல்கத்தாவின் எஸ்பிளனேடில் இருந்து மைதான் செல்லும் ஒரு வழியைத் தவிர, போக்குவரத்து பிரச்னைகள் காரணமாக டிராம் சேவை நிறுத்தப்படுகின்றன.

டிராம் சேவை நிறுத்தம் குறித்து சமூக ஊடகங்களில் சிலர் கொல்கத்தாவின் பாரம்பரிய அடையாளமாக இருக்கும் டிராம் இயக்கத்தை நிறுத்தக் கூடாது என்றும், இந்த கால போக்குவரத்துக்கு டிராம் ஏற்றத்தல்ல என்றும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

முறையான பராமரிப்பு இல்லாமை, சாலை ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் பெருமளவில் இதன் இயக்கம் குறைந்துவந்த நிலையில், தற்போது நிறுத்தப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் - ரஷியா சண்டைக்கு விரைவில் முடிவு: பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் பேச்சு!

என்சிசி பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை; காலியிடங்கள்: 70

பதவிப் பறிப்பு - வேதனையில்லை! மகிழ்ச்சிதான்: செங்கோட்டையன் | செய்திகள்: சில வரிகளில் | 06.09.25

காஸா மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை! கைப்பற்றும் நடவடிக்கையா?

குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

SCROLL FOR NEXT