ஜப்பானில் நிலநடுக்கம் (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

ஜப்பானில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்...!

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

ஜப்பான் நாட்டில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானின் மூன்றாவது மிகப் பெரிய தீவான கியூஷூவில், இன்று (ஏப்.2) இரவு 7.34 மணியளவில் (இந்திய நேரப்படி) நிலப்பரப்பிலிருந்து சுமார் 30 கி.மீ. ஆழத்தில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வானது கியூஷூ தீவு முழுவதும் உணரப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதனால் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பொருள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்த எந்தவொரு தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.

முன்னதாக, தீவு நாடான ஜப்பான் அமைந்துள்ள பசிபிக் பெருங்கடல் பகுதியில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் மெகா நிலநடுக்கம் ஏற்பட்டால் மிகப்பெரியளவிலான சுனாமி ஏற்பட்டு சுமார் 3 லட்சம் மக்கள் பலியாகும் அபாயமுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்திருந்தது.

மேலும், இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி 3,000-க்கும் அதிகமானோர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 3 மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம்! ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT