FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவு!

ஆப்கானிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறித்து...

20 பிப்ரவரி 2026, 8:20 pm IST
ஆப்கன் நிலநடுக்கம் (கோப்புப் படம்) - AP
பகிர்:

ஆப்கானிஸ்தான் நாட்டில், 5.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இருந்து 130 கி.மீ. தொலைவிலுள்ள நங்கார்ஹர் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 20) மாலை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், காபுல் நகரத்துக்கு மேற்கில் அமைந்துள்ள பாமியான் மற்றும் வர்தாக் ஆகிய மாகாணங்களிலும் நிலஅதிர்வுகள் உணரப்பட்டதாக, உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

Advertisement

Advertisement

இருப்பினும், இந்தப் புதிய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

யுரேசிய மற்றும் இந்திய டெக்டோனிக் தகடுகளுக்கு இடையில் அமைந்துள்ளதால், ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் மலைத்தொடர்கள் நிலநடுக்கம் ஏற்படும் அபாயமுள்ள பகுதி எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணங்களில் கடந்த 2025 ஆகஸ்டில் ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து, சுமார் 2,200-க்கும் அதிகமான மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

summary

A powerful earthquake measuring 5.8 on the Richter scale has struck Afghanistan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments