நத்தம் அருகே பாரம் தாங்காமல் சாக்கடை உடைந்து கவிழ்ந்த லாரி 
தற்போதைய செய்திகள்

பாரம் தாங்காமல் சாக்கடை உடைந்து கவிழ்ந்த லாரி: ஓட்டுநர்கள் 2 பேர் காயம்

நத்தம் அருகே பாரம் தாங்காமல் சாக்கடை உடைந்து லாரி கவிழ்ந்த விபத்தில் லாரி ஓட்டுநர்கள் 2 பேர் காயமடைந்தனர்.

DIN

திண்டுக்கல்: நத்தம் அருகே பாரம் தாங்காமல் சாக்கடை உடைந்து லாரி கவிழ்ந்த விபத்தில் லாரி ஓட்டுநர்கள் 2 பேர் காயமடைந்தனர்.

தென்காசி மாவட்டம், தென்காசியில் இருந்து நெல் உமி மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு நத்தம் நோக்கி வந்தது. லாரியை விருதுநகர் மாவட்டம் சிவகாசி சக்தி நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் கனகராஜ் (50) ஓட்டி வந்தார்.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அம்மன் குளம் அருகே உள்ள எடை போடும் நிலையத்தில் லாரியை எடை போட்டு திருப்பியபோது சாலை ஓரத்தில் இருந்த சாக்கடை மீது அமைக்கப்பட்டிருந்த நடைபாதை மீது ஏறி இறங்கியது.

அப்போது அளவுக்கு அதிகமான எடையுடன் இருந்த லாரி பாரம் தாங்காமல் சாக்கடையில் இருந்த சிமென்ட் கல் உடைந்து லாரி கவிழ்ந்தது. விபத்தில் லாரியை ஓட்டி வந்த கனகராஜ் மற்றும் மாற்று ஓட்டுநராக வந்த தென்காசி முத்துமலைபுரத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் செல்வகுமார் (30) ஆகிய இருவரும் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தோர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராசக்தி படப்பிடிப்பு நிறைவு!

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி, 12 பேர் காயம்

அடுத்த படம் தனுஷுடன்தான்: மாரி செல்வராஜ்

பங்குச்சந்தை முதலீடு: அதிக லாபம் என்று சொன்னாலே நம்ப வேண்டாம்!!

மெஸ்ஸி மேஜிக், ஜோர்டி ஆல்பா ஓய்வு: இன்டர் மியாமி அபார வெற்றி!

SCROLL FOR NEXT