வெண்ணெத்தாழியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் உற்சவர் ராஜகோபாலசுவாமி. 
தற்போதைய செய்திகள்

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் வெண்ணைத்தாழி உற்சவம்!

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு வெண்ணைத்தாழி உற்சவம் புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

DIN

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு வெண்ணைத்தாழி உற்சவம் புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ராஜகோபாலசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் 18 நாள் பங்குனித் திருவிழாவும்,அதனைத் தொடர்ந்து 12 நாள் விடையாற்றி விழாவும் நடைபெறும். நிகழாண்டின் திருவிழா கடந்த மார்ச் 18 ஆம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் முக்கிய நிகழ்வுகளான,வெள்ளி ஹம்ச வானத்தில் ராஜ அலங்கார சேவை,கோவர்த்தனகிரியில் கண்ணன் திருக்கோலம், மரவுரிராமர் திருக்கோலம்,கணடபேரண்ட பட்க்ஷிவாகனம்,வண்ண புஷ்ப பல்லக்கு சேவை, தங்க சூர்யபிரபை, ஆண்டாள் திருக்கோலம், தங்க கருடவாகனம் ஆகியவை நடைபெற்றது.

ராஜகோபாலசுவாமி மீது வெண்ணையை தெளித்து வழிப்படும் பக்தர்கள்

16 ஆம் நாள் திருவிழாவான, புதன்கிழமை வெண்ணைத்தாழி உற்சவத்தை முன்னிட்டு காலையில் சுவாமி நவநீத சேவையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, திருக்கோயிலின் நான்கு வீதிகள், மேலராஜவீதி, காமராஜர்சாலை, பந்தலடி வழியாக காந்திசாலை வெண்ணைத்தாழி மண்டபம் சென்றடைந்தார்.

அப்போது,சாலையில் இருபக்கங்களில் திரண்டியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி மீது வெண்ணையை தெளித்து,கோபாலா,கோபாலா என பக்தி கோஷம் எழுப்பி பெருமாளை வழிபட்டனர்.

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் வெண்ணைய் தாழி திருவிழாவினை முன்னிட்டு உற்சவர் ராஜகோபாலசுவாமி மீது வெண்ணையை தெளித்து வழிப்படும் பக்தர்கள்

நிகழ்ச்சியில், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி, கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சி. இளவரசன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் , கோயில் செயல் அலுவலர் எஸ்.மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவிழாவின் 17 ஆம் நாளான நாளை வியாழக்கிழமை(ஏப்.3) மதியம் 2 மணிக்கு,உற்சவர் ராஜகோபாலசுவாமி தேரில் எழுந்தருளும் தேரோட்டம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொணவட்டத்தில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

ஆம்பூா், பெரியாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

இறுதிச்சுற்றில் சபலென்கா - அனிசிமோவா பலப்பரீட்சை

உற்பத்தித் துறையில் 15 ஆண்டுகள் காணாத வளா்ச்சி

ஹூண்டாய் விற்பனை 4% குறைவு

SCROLL FOR NEXT