புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகத்தினர். 
தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் தவெக ஆர்ப்பாட்டம்

வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகத்தினர் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

மத்திய அரசு கொண்டுவந்துள்ள முஸ்லீம்களின் உரிமைகளை பறிக்கும் வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகத்தினர் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ள வக்ஃபு வாரிய திருத்த சட்டம் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முஸ்லீம்களின் உரிமைகளை பறிக்கும் இந்த திருத்த சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், மத்தியில் ஆளும் பாஜக அரசானது தொடர்ந்து சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதை கண்டித்தும் புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்தும், வக்ஃபு வாரியத்தின் சட்டத்தை உடனடியாக திரும்ப பெறக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவின் நிறைவேறாத சில வாக்குறுதிகளுக்கு மத்திய அரசே காரணம்: வைகோ

மதிமுக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

காம் & கூல்... கல்யாணி பிரியதர்ஷன்!

ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் இந்தியாவுக்கு முதல்முறையாகப் பதக்கம்: தமிழகத்தின் ஆனந்த்குமார் சாதனை!

அட... ஆண்ட்ரியா!

SCROLL FOR NEXT