சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக சனிக்கிழமை பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், கடந்த 9 நாள்களில் பவுனுக்கு ரூ.3,000 உயா்ந்து. அதன்படி ஏப்.3-இல் தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக கிராம் ரூ.8,560-க்கும், பவுன் ரூ.68,480-க்கும் விற்பனையானது.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.160 குறைந்து ரூ.8,400-க்கும், பவுனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.67,200-க்கும் விற்பனையானதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக சனிக்கிழமை காலை அதிரடியாக கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.8,310-க்கும் பவுனுக்கு ரூ.720 குறைந்து ஒரு ரூ.66,480-க்கும் விற்பனையாகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டு நாள்களில் பவுனுக்கு ரூ.2,000 குறைந்துள்ளது.
அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.103-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 குறைந்து ரூ.1,03,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.