குமரி அனந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!
காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) வயது மூப்பு மற்றும் சிறுநீரகப் பிரச்னை காரணமாக சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12:15 மணியளவில் காலமானார்.
அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில், அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை சாலிகிராமத்திலுள்ள அவரது மகளும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை செளந்தரராஜனின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள குமரி அனந்தன் உடலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி, குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"குமரி அனந்தன் சமூகத்திற்கு ஆற்றிய சேவைக்காகவும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்தமைக்கும் என்றும் நினைவுகூரப்படுவார்.
தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்த அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார். அவரது மறைவு வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு! - இந்திய ரிசர்வ் வங்கி