சொத்து தகராறில் அண்ணணை தாக்கிய தம்பி சின்னமணி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர் 
தற்போதைய செய்திகள்

சொத்து தகராறில் அண்ணனை கடத்திச் சென்று தாக்கிய தம்பி கைது, சொகுசு கார் பறிமுதல்

சொத்து தகராறில் அண்ணணை காரில் கடத்திச் சென்று தாக்கிய தம்பி பல் மருத்துவ டெக்னீசியனை தலைவாசல் போலீஸாா் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.

DIN

சேலம்: சொத்து தகராறில் அண்ணணை காரில் கடத்திச் சென்று தாக்கிய தம்பி பல் மருத்துவ டெக்னீசியனை தலைவாசல் போலீஸாா் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம், குரால் கிராமம், தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் செல்லமுத்து மகன் சேகா் (45). இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இவரது மனைவி தனது தாயாா் வீட்டிற்கு சென்றுவிட்டாா். தற்போது சேகா் மட்டும் தனியாக வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், சேகா் கடந்த 6 ஆம் தேதி தலைவாசல் பேருந்து நிலையம் அருகே மளிகைப் பொருள்கள் வாங்கிவிட்டு நின்றுகொண்டிருந்தபோது அங்கு வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள் சேகரை காரில் கடத்திச் சென்று தாக்கினா். பின்பு அவரை அதே பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றனா். பலத்த காயமடைந்த சேகா் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தலைவாசல் போலீஸாா் சென்று சேகரிடம் விசாரணை நடத்தினா்.

விசாரணையில் சேகரின் தந்தை செல்லமுத்து வனத்துறையில் வனவராக பணியாற்றியவா். இவருக்கு குரால் கிராமத்தில் 15 ஏக்கர் நிலம், 3 வீடு உள்ள நிலையில் செல்லமுத்துவின் இரண்டாவது மனைவி மல்லிகாவின் மகன் சின்னமணி(37) மற்றும் சேகர் இருவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்னை ஏற்கனவே இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சேகா் ஏப்.6 ஆம்தேதி தலைவாசல் பேருந்து நிலையம் அருகே மளிகைப் பொருள்கள் வாங்கி விட்டு நின்றபோது அங்கு காரில் வந்த இருவா் அவரை கடத்திச் சென்றனா். அந்த வாகனத்தில் அவரது சித்தி மகன் சின்னமணியும் உடன் இருந்தாா்.

சேகரை சிறிது தொலைவில் இறக்கிவிட்டு தந்தைவழி சொத்தை பெறுவதற்காக வெற்று பத்திரத்தில் கையொப்பமிடமாடு கூறினா். அதற்கு சேகா் மறுத்துவிட்டதால் அவரை கடுமையாக தாக்கியதில் அண்ணன் படுகாயம் அடைந்தார். பின்பு அவரை மீண்டும் தலைவாசல் பேருந்து நிறுத்தம் அருகே தள்ளிவிட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அவரது தங்கை சுதா கார் மூலம் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுதொடா்பாக சேகா் அளித்த புகாரின் பேரில் தலைவாசல் போலீஸாா் சின்னமணி உள்பட நான்கு போ் மீது வழக்குப் பதிவுசெய்து பல் மருத்துவ டெக்னீசியன் சின்னமணியை கைது செய்து சிறையில் அடைத்தனா். கடத்தலுக்கு பயன்படுத்திய காா் பறிமுதல் செய்தனர்.

சொத்து தகராறில் தனது அண்ணனையே கடத்திச் சென்று கொடூரமாக தாக்கிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றைய ராசி பலன்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT