சோளிங்கர் அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள். 
தற்போதைய செய்திகள்

குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் மக்கள் திடீா் சாலை மறியல்

சோளிங்கர் அருகே குடிநீர் கேட்டு மக்கள் காலிக் குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

DIN

ராணிப்பேட்டை: சோளிங்கர் அருகே குடிநீர் கேட்டு மக்கள் காலிக் குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், ரெண்டாடி ஊராட்சிக்குட்பட்ட குளத்தூர் கிராமத்திற்கு, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அந்த கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் குடிநீர் விநியோகிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

இந்த நிலையில், குளத்தூர் கிராம மக்கள் முறையாக குடிநீர் விநியோகிக்க வேண்டும் என கேட்டு வியாழக்கிழமை காலிக் குடங்கள் வைத்தும், வாகனங்கள் செல்லாதவாறு குறுக்கே வைத்து மறியலில்

ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற அரசு பேருந்தை மறித்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

தகவல் அறிந்த வருவாய் துறையினர் விரைந்து வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைந்து குடிநீா் வழங்கப்படும் என உறுதி கூறியதையடுத்து, அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஜல் அகர்வால் விபத்தில் சிக்கினாரா?

கோவையில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்!

தேங்காய், எண்ணெய் பாட்டில்கள் திருட்டு.. மும்பை விமான நிலைய அதிகாரிகள் 15 பேர் பணிநீக்கம்!

குடியரசு துணைத் தலைவர் தோ்தல்! முதலில் வாக்களித்த பிரதமர் Modi

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது: மேல்முறையீட்டு மனு இன்று பிற்பகல் விசாரணை!

SCROLL FOR NEXT