ஆந்திரம்: ஆந்திரம் மாநிலம் கைலாசபட்டணத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு உற்பத்தி ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உள்பட 8 போ் பலியாகினர், 7 போ் காயமடைந்த நிலையில், இறந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.
ஆந்திரம் மாநிலம் அனகாபள்ளி மாவட்டம், கைலாசபட்டணம் கிராமத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் ஒரு பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுமார் 15 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.45 மணியளவில் திடீரென பயங்கர சப்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிச்சத்தம் கேட்டதும் சம்பவ இடத்திற்கு ஒடிவந்த கிராம மக்கள், வெடிவிபத்தில் சிக்கி சிதறிக் கிடந்த உடல்கள்களை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள், காயமடைந்த நிலையில் கிடந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வெடி விபத்தில் ஆலையின் பல அறைகள் இடிந்து தரைமட்டமானது.
பின்னர், கட்டட இடிபாடுகளில் சிக்கி பலியான இரண்டு பெண்கள் உள்பட 8 உடல்களை மீட்டனர். இதில், 7 பேர் காயமடைந்ததாகவும், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வெடிவிபத்து குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் விஜய கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்த ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு, காயமடைந்தவா்களுக்கு முறையான மருத்துவ வசதியை உறுதி செய்யுமாறு அமைச்சா் அனிதா மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடா்பாக உரிய விசாரணை நடத்தி, அறிக்கை சமா்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளாா்.
பிதமர் நரேந்திர மோடி இரங்கல்
இந்நிலையில், வெடி விபத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இறந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.