நத்தம் அருகே சாலையின் நடுவில் இருந்த மின் கம்பத்தில் மோதி தலை குப்புற கவிழ்ந்து கிடக்கும் கார். 
தற்போதைய செய்திகள்

நத்தம் அருகே சாலையில் மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்த கார்

நத்தம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் இருந்த மின் கம்பத்தில் மோதி தலை குப்புற கவிழ்ந்தது.

DIN

நத்தம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் இருந்த மின் கம்பத்தில் மோதி தலை குப்புற கவிழ்ந்தது. இதில் நல்வாய்ப்பாக ஓட்டுநர் உள்பட இரண்டு பேரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழ கள்ளந்திரியைச் சேர்ந்தவர் தேவராஜ் (60). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனது உறவினரை சந்திப்பதற்காக வாடகை கார் மூலம் கீழ கள்ளந்திரியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்றுள்ளார்.

காரை மதுரை வண்டியூர் யாகப்பா நகரைச் சேர்ந்த மகாராஜன் மகன் சக்திவேல் (21) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

கார், மதுரை துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் நத்தம் வழியாக பள்ளபட்டி பிரிவு அருகே உள்ள மேம்பாலத்தில் அதி வேகமாக வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் கார் தலை குப்புற கவிழ்ந்தது.

கார் மோதிய வேகத்தில் மின் கம்பம் அடியோடு சாய்ந்தது.

இந்த விபத்தில் காரில் ஏர்பேக் இருந்ததால் நல்வாய்ப்பாக இரண்டு பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

காயமடைந்த இரண்டு பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

SCROLL FOR NEXT