நடிகர் பாலா Instagram
தற்போதைய செய்திகள்

கதாநாயகனாகும் விஜய் டிவி பாலா! இயக்குநர் யார் தெரியுமா?

விஜய் டி.வி. பாலா கதாநாயகனாக அறிமுகம் ஆவதைப் பற்றி...

DIN

விஜய் டி.வி. பாலா புதிய திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பான கலக்கப் போவது யாரு? குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் வெட்டுக்கிளி பாலா. இவர் அந்த நிகழ்ச்சிகளில் நகைச்சுவைத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்தாலும், அவ்வப்போது ஏழை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.

துவக்கத்தில், சிறியளவில் உதவிகளைச் செய்து வந்த அவர் பின்னர் பிரபல நடிகரான ராகவா லாரன்ஸ் போன்றோருடன் இணைந்து தனது தொண்டுகளை விரிவுப்படுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக செயல்பட்டு வந்த பாலா தமிழ்த் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் அவ்வப்போது நடித்து வந்தார்.

இந்நிலையில், நடிகர் வைபவ்-ன் 25-வது படமாக கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ‘ரணம் - அறம் தவறேல்’ எனும் திரைப்படத்தின் இயக்குநரான ஷெரீஃப்பின் புதியப் படத்தின் மூலம் பாலா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

ஆதிமூலம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகவிருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமுக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

பாலா #01 என்ற தலைப்பில் வெளியான அந்தப் போஸ்டரை இந்தப் படத்தின் கதாநாயகன் மற்றும் இயக்குநர் ஷெரீஃப் உள்ளிட்டோர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததுள்ளனர்.

மேலும், விவேக்- மெர்வின் ஆகியோரின் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகியாக நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2023-ம் ஆண்டு வெளியான நடிகர் விஜய் சேதிபதியின் ’ஜுங்கா’ படத்தின் மூலம் பாலா தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நடிகர் அர்ஜூன் மகள் அஞ்சனாவுக்கு டும்.. டும்..! 13 வருடக் காதலாம்!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் பெயர் தமிழ் பெயர் அல்ல! நீங்கள் தமிழ் பெயர் சூட்டுங்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின்

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: பொதுத் தாள் II - பாடத்திட்டம்!

பிப். 2-ல் விஜய் தலைமையில் தவெக ஆண்டு விழா!

வேலை செய்வதில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?

பனி போர்த்திய நகரமாய் மணாலி! கழுகுப் பார்வை காட்சி!

SCROLL FOR NEXT