சிவச்சந்திரன்  
தற்போதைய செய்திகள்

யுபிஎஸ்சி: தமிழகத்தில் முதலிடம் பெற்ற சிவச்சந்திரன்!

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் சிவச்சந்திரன் என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.

DIN

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் சிவச்சந்திரன் என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார். இவர் இந்திய அளவில் 23 ஆம் இடம் பெற்றுள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின்(2024) இறுதி முடிவுகள் இன்று(ஏப். 22) வெளியிடப்பட்டுள்ளன.

கடந்தாண்டு ஜூன் மாதம் 16 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வும் செப்டம்பர் மாதத்தில் முதன்மைத் தேர்வும், அதைத் தொடர்ந்து இந்தாண்டு ஜனவரி - ஏப்ரல் மாதங்களில் நேர்காணலும் நடைபெற்ற நிலையில், இறுதி முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் முடிவுகளை அறியலாம்.

இதில், இந்திய அளவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சக்தி துபே என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார். மொத்தமாக 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் முதலிடம்!

தமிழகத்தைப் பொருத்தவரை சிவச்சந்திரன் என்ற மாணவர் முதலிடம் பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 23 ஆம் இடம் பெற்றுள்ள இவர், தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் ஆவார்.

இதுபற்றி சிவச்சந்திரன் கூறுகையில், “யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. தேர்வில் வெற்றிபெற நான் முதல்வன் திட்டம் உதவிகரமாக இருந்தது” என்றார்.

மோனிகா என்ற மாணவி அகில இந்திய அளவில் 39 ஆம் இடம் பெற்றுள்ளார். இவரும் நான் முதல்வன் திட்டத்தில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் படித்த 134 பேர் நேர்முகத் தேர்வுக்குச் சென்ற நிலையில் 50 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ் வழியில் முதன்மைத் தேர்வு எழுதிய காமராஜ், சங்கர பாண்டியன் என்ற தேர்வர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலைக்கிராமப் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

கிணற்றில் கழிவுகளைக் கொட்ட வந்த பல்லடம் நகராட்சி லாரி சிறைபிடிப்பு

புதிய வாடிக்கையாளா்கள்: ஏா்டெல்லை பின்னுக்குத் தள்ளிய பிஎஸ்என்எல்!

வெள்ளிச்சந்தை பகுதியில் அக். 22-இல் மின்தடை

கஞ்சா பதுக்கி வைத்திருந்தவா் கைது

SCROLL FOR NEXT