தற்போதைய செய்திகள்

குஜராத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவு

குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

DIN

குஜராத்: குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், கட்சு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 11.26 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 20 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாக பதிவானது.

இதையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலஅதிர்வுகள் உணரப்பட்டன. நிலஅதிா்வுகள் காரணமாக வீடுகள் மற்றும் கட்டடங்களை விட்டு பொதுமக்கள் அச்சத்தில் வெளியேறினா்.

இந்த நிலஅதிர்வால் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் மற்றும் பொருள் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT