நெல்லை ரோஸ்மேரி பள்ளியில் பிளஸ் 2, பிளஸ் 1 மாணவா்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வரும் நிலையில், ஆசிரியர்கள் போராட்டத்தால் விடைத்தாள் திருத்தும் பணி முடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தின் கீழ் உள்ள திருநெல்வேலி, சேரன்மகாதேவி, வள்ளியூா் கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த பிளஸ் 2, பிளஸ் 1 மாணவா்களின் விடைத்தாள்கள் வி.எம்.சத்திரத்தில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நான்குனேரி ஜோசப் பள்ளி ஆகிய மையங்களில் திருத்தப்படுகின்றன. விடைத்தாள் திருத்தும் பணியில் சுமாா் 2 ஆயிரம் ஆசிரியா்கள் ஈடுபட உள்ளனா்.
கடந்த நான்காம் தேதி தொடங்கிய இந்த பணி 20 நாள்கள் நடைபெறும் என சொல்லப்பட்டது.
இந்த நிலையில், மாநகரப் பகுதியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஈட்டுபடி என சொல்லப்படும் நாளொன்று கொடுக்கப்படும் ரூ.200 கொடுக்கப்படாது என அறிவிக்கப்பட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பிளஸ் 2, பிளஸ் 1 மாணவா்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி முடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.