நடிகர் அஜித் குமார் 
தற்போதைய செய்திகள்

நடிகர் அஜித் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

நடிகர் அஜித் குமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

சென்னை: நடிகர் அஜித் குமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புது தில்லியில் திங்கள்கிழமை(ஏப்.28) நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து நடிகர் அஜித் குமார் பத்ம பூஷண் விருதை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

தில்லியில் பத்ம பூஷண் விருது பெற்ற அஜித் குமார் செவ்வாய்க்கிழமை குடும்பத்துடன் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் ரசிகர்கள் திரண்டு நின்று அஜித் குமாரை வரவேற்றனர்.

பத்ம பூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாகவும் நடிகர் அஜித் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நடிகர் அஜித் குமாருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வழக்கமான மருத்துவ பரிசோதனை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அஜித் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT