பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டதற்காக நடிகர் மம்மூட்டி நன்றி தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பில் 131 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் 13 பேருக்கு பத்ம பூஷண், 5 பேருக்கு பத்ம விபூஷண், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான மம்மூட்டி நடிப்பு, தயாரிப்பு என இன்றும் சிறப்பாக இயங்கி வருகிறார்.
இவருக்கு பத்ம பூஷண் கிடைக்கவுள்ள செய்தியால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். முக்கியமாக, திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், மம்மூட்டி பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பத்ம பூஷண் என்கிற உயரிய விருதால் கௌரவிக்கப்பட்டதற்காக தேசத்திற்கும், மக்களுக்கும், அரசிற்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். அனைவருக்கும் குடியரசு நாள் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.