தற்கொலை செய்து கொண்ட கூலித் தொழிலாளி வடிவேல். 
தற்போதைய செய்திகள்

கூலித்தொழிலாளி தற்கொலை: கடனை திருப்பிச் செலுத்த தனியார் வங்கி ஊழியர்கள் நெருக்கடி?

தனியார் வங்கி ஊழியர்கள் கடனை திருப்பிச் செலுத்தக் கோரி நெருக்கடி கொடுத்தது காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்ததால், வாழப்பாடி போலீசார் விசாரணை

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதற்கு, தனியார் வங்கி ஊழியர்கள் கடனை திருப்பிச் செலுத்தக் கோரி நெருக்கடி கொடுத்தது காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்ததால், வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழப்பாடி அடுத்த துக்கியாம் பாளையம் பாலசுப்பிரமணிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி வடிவேல் (52). இவர் செவ்வாய்க்கிழமை மாலை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார், கூலித் தொழிலாளியின் உடலை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர் வாழப்பாடியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால், தனியார் வங்கி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை இவரது வீட்டிற்கு சென்று, கடனை செலுத்துமாறு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து இவர் தற்கொலை செய்து கொண்டதாக, இவரது உறவினர்கள், புதன்கிழமை காலை வாழப்பாடி போலீசில் புகார் செய்தனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடனை திருப்பிச் செலுத்தக் கோரி தனியார் வங்கி ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததால், கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டில் தீ விபத்து: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி: ஜி.கே வாசன்

ஒளிவீசும் நிலம்... லைலா!

ஒசூரில் 780 விநாயகா் சிலைகள் கரைப்பு

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

SCROLL FOR NEXT