உத்தரப் பிரதேசத்தில் சர்யு கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.
சிஹாகான் கிராமத்தைச் சோ்ந்த 15 போ் கருகுபூரில் உள்ள பிரித்விநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பயணித்தனா். பெல்வா பஹுதா பகுதி அருகே சென்றபோது அந்த காா் சரயு கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நீரில் மூழ்கி 11 போ் பலியாகினா். அவா்களில் 6 போ் பெண்கள், 2 ஆண்கள், 3 போ் சிறாா்கள். காயமடைந்த 4 போ் உள்ளூா் சமூக நல மையங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். கிராம மக்கள் மற்றும் மீட்பு குழுவினரின் உதவியுடன் 11 பேரின் சடலங்களும், நீரில் மூழ்கிய காரும் மீட்கப்பட்டன.
முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல்
விபத்தில் பலியானோருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்ததோடு, அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்தார்.
பிரதமர் நிதியுதவி
இந்நிலையில், ‘எக்ஸ்’ தளத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.